திரையரங்குகளில் மந்தம் - சமந்தாவின் ‘சாகுந்தலம்’ முதல் நாளில் ரூ.5 கோடி வசூல்

திரையரங்குகளில் மந்தம் - சமந்தாவின் ‘சாகுந்தலம்’ முதல் நாளில் ரூ.5 கோடி வசூல்
Updated on
1 min read

சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் முதல் நாள் 5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் நேற்று (ஏப்ரல் 14) திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’. மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்தது.

இது திரையரங்குகளிலும் எதிரொலித்ததால், முதல் நாளான நேற்று படம் வெறும் ரூ.5 கோடி வசூலை மட்டுமே ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூ.65-70 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இப்படம் தெலுங்கு மாநிலங்களின் திரையரங்குகளில் ஒட்டுமொத்தமாக 32.60 சதவீதம் ஆக்கிரமிப்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in