படத் தலைப்பை எதிர்த்து வழக்கு நீதிமன்றம் சென்று மீட்ட ரம்யா!

ரம்யா | கோப்புப்படம்
ரம்யா | கோப்புப்படம்
Updated on
1 min read

கன்னட நடிகையான ரம்யா, தமிழில் ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர். இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவர் தயாரித்துள்ள படத்திற்கு ‘சுவாதி முத்தின மளே ஹனியே’ (Swathi Muttina Male Haniye) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பிரபல கன்னட சூப்பர் ஹிட் பாடலின் வரி.

இந்த தலைப்பைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து கன்னட இயக்குநர் ராஜேந்திர சிங் பாபு என்பவர் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ‘தான் 30 வருடத்துக்கு முன் இயக்கிய ‘பன்னத் கெஜ்ஜே’ என்ற படத்தில் இந்தப் பாடல் வரி இடம் பெற் றிருந்ததாகவும் பின் இந்த பாடல் வரி கொண்ட டைட்டிலை வைத்து படம் இயக்கியதாகவும் அம்பரீஷ் இறந்து விட்டதால், அதை தொடர முடியவில்லை என்றும் அதனால் இந்தத் தலைப்பை ரம்யா பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த தலைப்பை ரம்யா பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in