

தமிழில் 'அன்பு' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, 'காதல் கிசுகிசு', 'கலிங்கா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்தார். மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், பாடகி அம்ருதாவை 2016ம் ஆண்டு திருமணம் செய்தார்.
பின்னர் விவாகரத்து பெற்றார். அடுத்து டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலா, தனக்கு பெரிய அறுவைச் சிகிச்சை நடக்க இருப்பதாகவும் அதில் எதுவும் நடக்கலாம் என்றும் உருக்கமாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.