‘புஷ்பா எங்கே?’ - வெளியானது க்ளிம்ஸ் வீடியோ

‘புஷ்பா எங்கே?’ - வெளியானது க்ளிம்ஸ் வீடியோ
Updated on
1 min read

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் ‘Where is Pushpa’ க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், இதில் படத்தின் டீசர் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஹிட்டாகின. பான் இந்தியா முறையில் வெளியான இப்படம், அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. புஷ்பா திருப்பதி ஜெயிலில் இருந்து புல்லட் காயங்களுடன் தப்பிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் தொடங்குகிறது. மேலும், ’புஷ்பா எங்கே?’ (Where is Pushpa?) என்ற கேள்வியும் பரபரப்பாக எழுப்பபடுகிறது. அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் ஏப்ரல் 7 அன்று மாலை 04:05 மணிக்கு வெளியாகும் என வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in