தென்னிந்திய சினிமாவில் பழைய கதைகள்: வில்லன் நடிகர் விமர்சனம்

நடிகர் ராகுல் தேவ் | படம்: ட்விட்டர்
நடிகர் ராகுல் தேவ் | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

பிரபல வில்லன் நடிகர் ராகுல் தேவ். விஜயகாந்தின் ‘நரசிம்மா’, லாரன்ஸின் ‘முனி’, சூர்யாவின் ‘ஆதவன்’, அஜித்தின் ‘வேதாளம்’, சரவணனின் ‘லெஜெண்ட்’ உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்தி, தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் ‘தென்னிந்திய திரைப்படங்கள், 70 மற்றும் 80-களில் இருந்த டெம்பிளேட்’டையே பின்பற்றுவதாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது. நிஜ வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆக்‌ஷன் காட்சிகளை தென்னிந்திய சினிமாவில் காண்பிக்கிறார்கள். அது வேடிக்கையாக இருக்கிறது. ஒரே மாதிரியான கதையாக இருந்தாலும் அதை பார்வையாளர்களைக் கவரும் வகையில் சொல்வதால், அந்தப் படங்களுக்கு வரவேற்புகள் இருக்கிறது. நான் படித்தக் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வருபவன். பிரம்மாண்டமான படங்களில் நடிக்கும்போது எனது மூளை மற்றும் புத்திசாலித்தனத்தை வீட்டில் வைத்துவிட்டுதான் வரவேண்டும்.

நிஜ வாழ்க்கையில் 2 பேர் சண்டைப் போடுகிறார்கள் என்றால், அவர்கள் தங்கள்சட்டையைக் கிழித்து, உடலை யாரிடமும் காட்டுவார்களா? இது வணிக சினிமாவில் நடக்கிறது. இதை மோசம் என்று சொல்லமாட்டேன். பெரும்பாலானபார்வையாளர்கள் இதை விரும்புகிறார்கள்.

இங்கு எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கநாம் யார்? இது ஒரு படைப்பாற்றலின் வெளிப்பாடு மட்டுமே. அதை எந்த வகையிலும் வெளிப்படுத்தலாம். இவ்வாறு ராகுல் தேவ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in