Published : 02 Apr 2023 08:56 AM
Last Updated : 02 Apr 2023 08:56 AM
‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சி, இத்தாலி நாட்டின் மிகவும் பழமையான நகரான மாடேராவில் (Matera) எடுக்கப்பட இருக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ படத்தின் சில ஆக்ஷன் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT