நடிகர் பாலாவுக்கு அறுவைச் சிகிச்சை - வீடியோவில் உருக்கம்

நடிகர் பாலாவுக்கு அறுவைச் சிகிச்சை - வீடியோவில் உருக்கம்
Updated on
1 min read

தமிழில், ‘அன்பு’ படத்தின் மூலம் ஹீரோவானவர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், வீரம், அண்ணாத்த உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

2010ம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட பாலா, அவரைபிரிந்தார். கடந்த 2021ம் ஆண்டு எலிசபெத் உதயன் என்ற மருத்துவரை மறுமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலா உருக்கமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு 2 அல்லது 3 நாட்களில் முக்கிய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இன்று எங்களது 2-வது ஆண்டு திருமண நாள். என் மனைவி கொண்டாட விரும்பினார். பிறப்போ, இறப்போ கடவுள் முடிவெடுப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், தனது மனைவியிடம் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அடுத்து நடிகரை திருமணம் செய்துகொள்ளாதே, டாக்டரை திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார். அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in