கால்நடை மருத்துவமனை கட்டுகிறார் பழம்பெரும் நடிகை லீலாவதி

கால்நடை மருத்துவமனை கட்டுகிறார் பழம்பெரும் நடிகை லீலாவதி
Updated on
1 min read

பழம்பெரும் நடிகை லீலாவதி (85), தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர், தமிழ், கன்னடம், தெலுங்கில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில், தனது மகனும் நடிகருமான வினோத் ராஜூடன் வசித்து வருகிறார்.

இவர் சோலதேவனஹல்லியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமீபத்தில் கட்டியிருந்தார். இந்நிலையில் இப்போது கால்நடை மருத்துவமனை ஒன்றைக் கட்டி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “கால்நடைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால், கால்நடை மருத்துவமனை கட்ட முடிவு செய்தேன். பணிகள் முடிந்ததும் மருத்துவர்களை நியமிக்க முதல்வர் பசவராஜ் பொம்மையை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in