

தெலுங்கு நடிகர் நிதின், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் வெங்கி குடுமுலா இணைந்த படம், ‘பீஷ்மா’. கடந்த 2020ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.
இந்தக் கூட்டணி இப்போது மீண்டும் இணைகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.