மிருணாள் தாக்கூரின் கண்ணீர் புகைப்படம்

மிருணாள் தாக்கூரின் கண்ணீர் புகைப்படம்
Updated on
1 min read

நடிகை மிருணாள் தாக்கூர், ‘சீதாராமம்’ படத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமடைந்துள்ளார். அடுத்து 2 தமிழ்ப் படங்களில் நடிக்க இருக்கிறார். இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அழுதுகொண்டிருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விளக்குவதற்காக இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

“நேற்று கடினமான நாள். இன்று தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் கதைகளில் சில பக்கங்கள் இருக்கும். அதை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் நான் என் கதையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் நான் கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, “இது கடந்த காலத்தில், இக்கட்டான சூழலில் இருந்தபோது எடுத்த புகைப்படம். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in