

தமிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தவர் நிஹாரிகா. தெலுங்கு நடிகையான இவர், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள். நாகபாபு, தமிழில் ‘விழித்திரு’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நிஹாரிகா, ஆந்திர போலீஸ் அதிகாரி பிரபாகர் ராவின் மகன், சைதன்யா என்பவரைக் காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு, உதய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சைதன்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஹாரிகாவுடன் இருக்கும் அனைத்துப் புகைப்படங்களையும் திருமண வீடியோவையும் நீக்கியுள்ளார். நிஹாரிகாவும் சைதன்யாவை இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார். இதனால் இருவரும் விவாகரத்துப் பெற உள்ளதாகத் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.