சுமார் 1.44 கோடி செலவு செய்து ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற படக்குழு

சுமார் 1.44 கோடி செலவு செய்து ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற படக்குழு
Updated on
1 min read

ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொள்ள இலவச டிக்கெட் வழங்கப்படாத சூழலில் ஒருவருக்கு ரூ.20 லட்சம் செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்பதற்காக விருதாளர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸுக்கு சென்றிருந்தனர்.

இலவச டிக்கெட் இல்லாததால், நபர் ஒருவருக்கு சுமார் ரூ.20 லட்சம் செலுத்தி ராஜமவுலி தனிப்பட்ட முறையில் டிக்கெட் பெற்றதாகத் தெரிகிறது. விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருந்த இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விழாவில் ராஜமவுலியுடன் அவரது மனைவி, மகன், மருமகள், நடிகர் ராம்சரண் மற்றும் அவரின் மனைவி, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி, சுமார் 1.44 கோடிவரை செலவு ஆகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in