Published : 15 Mar 2023 09:15 AM
Last Updated : 15 Mar 2023 09:15 AM

நடிகர் ராகுல் மாதவ் திருமணம்

தமிழில் ‘அதே நேரம் அதே இடம்’படம் மூலம் நடிகராக அறிமுகமனாவர் ராகுல் மாதவ். ‘தனி ஒருவன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள அவர் மலையாளத்தில் ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த தீபாஸ்ரீ என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் பெங்களூரில் எளிமையாக நேற்று முன்தினம் நடந்தது.

இதில் இயக்குநர் ஷாஜி கைலாஷ், நடிகர் நரேன் உட்பட திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x