திறப்பு விழாவுக்கு வந்த நாயகிக்கு திடீர் உடல் நலக்குறைவு

திறப்பு விழாவுக்கு வந்த நாயகிக்கு திடீர் உடல் நலக்குறைவு
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், நெல்லூரில் செல்போன் கடை திறப்பு விழாவுக்கு நேற்று வந்த கதாநாயகி ஷாலினி பாண்டேவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தெலுங்கில் தற்போது வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அர்ஜுன் ரெட்டி’.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருக்கும் இப்படத்தின் கதாநாயகி ஷாலினி பாண்டே. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய திரைப்படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் 'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக இருக்கிறார்.

வளர்ந்து வரும் இளம் கதாநாயகியான இவர், நேற்று காலை நெல்லூரில் புதிய செல்போன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

ஏற்கெனவே காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ள இவர், காய்ச்சல் அதிகமானதால் திடீரென நிற்க கூட முடியாமல் அவதிப்பட்டதாக சொல்லப்பட்டது.

இது குறித்து அறிந்த செல்போன் கடை நிர்வாகிகள், உடனடியாக ஷாலினி பாண்டேவை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஷாலினிக்கு உடல்நலம் குறைந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை முன் கூடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in