சிங்கள படத்தில் தர்ஷனா ராஜேந்திரன்

சிங்கள படத்தில் தர்ஷனா ராஜேந்திரன்

Published on

மதுமிதா இயக்கிய ‘மூணே மூணு வார்த்தை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், தர்ஷனா ராஜேந்திரன். அடுத்து ‘கவண்’, ‘இரும்புத்திரை’ உட்பட சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படம் மூலம் பிரபலமான இவர், இப்போது சிங்களப் படத்தில் நடிக்கிறார்.

இலங்கையை சேர்ந்த பிரபல இயக்குநர் பிரசன்ன விதானகே. இவர் அடுத்து இயக்கும் படத்தில் இந்திய டெக்னீஷியன்கள் பலர் பணிபுரிகின்றனர். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ரோஷன் மேத்யூ நாயகனாக நடிக்கிறார். இதில் தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாக நடிக்கிறார். சிங்களம் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in