

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடித்து வருகிறார், அதிதி ராவ் ஹைதாரி. இவரும் நடிகர் சித்தார்த்தும் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றனர். காதல் பற்றி இருவரும் கருத்து ஏதும் கூறவில்லை.
இந்நிலையில் அதிதி ராவ் ஹைதாரி கூறும்போது, “நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். ரசிகர்கள் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். அவர்களைப் பேசாதீர்கள் என்று தடுக்க முடியாது. அவர்களுக்கு ஆர்வமான விஷயங்களில் அவர்கள்கவனம் செலுத்துவார்கள். நான் எனக்குப் பிடித்தவற்றில் கவனமாக இருக்கிறேன். அதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.