ரவி தேஜாவின் ‘ராவணாசுரா’ ஏப்ரல் 7-ல் வெளியாகும் என அறிவிப்பு

ரவி தேஜாவின் ‘ராவணாசுரா’ ஏப்ரல் 7-ல் வெளியாகும் என அறிவிப்பு
Updated on
1 min read

ரவி தேஜாவின் ‘ராவணாசுரா’ திரைப்படம் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தமக்கா’, ‘வால்டர் வீரய்யா’, படங்களைத் தொடர்ந்து ரவிதேஜா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராவணாசுரா’ (Ravanasura). இந்தப்படத்தில் ரவிதேஜா ஸ்டைலிஷ் அவதாரம் எடுத்துள்ளதால் ரசிகர்கள் படத்தைக்காண ஆவலாக உள்ளனர். சுதீர் வர்மா இயக்கும் இப்படத்தில் அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ், ஃபரியா அப்துல்லா, தக்ஷா நகர்கர், பூஜிதா பொன்னாடா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் மற்றும் பீம்ஸ் ஆகியோர் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in