பிரபாஸுக்கு ஸ்ருதிஹாசன் நன்றி

பிரபாஸுக்கு ஸ்ருதிஹாசன் நன்றி
Updated on
1 min read

‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்து இயக்கும் படம், ‘சலார்’. இதில், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிருத்விராஜ், ஜெகபதிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பிரசாந்த் நீல் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “இதன் படக்குழுவுடன் பணிபுரிந்தது சிறப்பாக இருந்தது. படப்பிடிப்பில் அனைவரும் குடும்பமாக உணர்ந்தோம்” என்று கூறியுள்ளார், பிரபாஸ், இயக்குநர், ஹோம்பாளே பிலிம்ஸுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in