ஏப்.28-ல் வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’

ஏப்.28-ல் வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’

Published on

ஃபஹத் ஃபாசிலின் புதிய படமான ‘‘பாச்சுவும் அல்புத விளக்கும்’ (Paachuvum Albhuthavilakkum) ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘விக்ரம்’ மலையாளத்தில் ‘மலையன் குஞ்சு’ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய ஃபஹத் ஃபாசில் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’. அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பை கொடுக்கும் ஃபஹத் ஃபாசில் இந்தப் படத்திலும் அகில் சத்யன் என்ற இயக்குநருக்கு சினிமாவில் அறிமுகத்தை கொடுத்திருக்கிறார்.

மும்பை, கோவா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் அகில் சத்யன் கூறுகையில், “மும்பையில் குடியேறிய நடுத்தர வர்க்க மலையாளி இளைஞனாக ஃபஹத் நடிக்கிறார். கேரளாவுக்கு செல்லும் பயணத்தில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் இருக்கும். இளம்பெண்ணுக்கும் வயதான பெண்ணுக்கும் இடையிலான கதையில் இருவரையும் ஃபஹத் கதாபாத்திரம் எப்படி இணைக்கிறது என்பதுதான் படம்” என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in