

பிரபாஸ் நடிக்கவுள்ள 'சாஹோ' படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து 'சாஹோ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. சுஜீத் இயக்கவுள்ள இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.
பிரபாஸ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வில்லனாக பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபாஸ் - நீல் நிதின் முகேஷ் இருவருமே தங்களுடைய கதாபாத்திரத்திற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குநராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் -இசான் - லாய் இணை பணிபுரியவுள்ளது.