செவிலியர்கள் பற்றி அவதூறு - பாலகிருஷ்ணா வருத்தம்

செவிலியர்கள் பற்றி அவதூறு - பாலகிருஷ்ணா வருத்தம்
Updated on
1 min read

பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. இவர் ‘ஆஹா’ ஓடிடி தளத்துக்காக பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில், சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். அப்போது பாலகிருஷ்ணா பேசும்போது, செவிலியரை வர்ணித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்.

அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பாலகிருஷ்ணா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பாலகிருஷ்ணா வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: செவிலியர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் ஆதாரமற்ற விஷயங்களை நிராகரிக்கிறேன். நான் சொன்னதன் அர்த்தம் முற்றிலும் திரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு சேவை செய்யும் என் சகோதரிகள் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு.

எங்களின் புற்றுநோய் மருத்துவமனையில் அவர்களின் சேவைகளைப் பார்த்திருக்கிறேன். என் வார்த்தைகள் உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in