

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ், இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். அவர் இப்போது கன்னடத்துக்கும் செல்ல இருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார், ‘கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீனி இயக்கும் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 10ம் தேதி தொடங்குகிறது.
இந்தப் படம் மூலம் மலையாள நடிகர் ஜெயராம் கன்னடத்தில் அறிமுகமாகிறார். இந்தி நடிகர் அனுபம் கெர், அர்ச்சனா ஜோய்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் இதில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசியுள்ளனர். ஆனால், விஜய் சேதுபதி தரப்பில் இருந்து இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.