5 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மாளவிகா மோகனன்

5 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மாளவிகா மோகனன்

Published on

பட்டம் போலே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து கன்னடம், இந்தி படங்களில் நடித்து வந்த அவர், ரஜினியின் ‘பேட்ட’ மூலம் தமிழுக்கு வந்தார்.

விஜய்யின் ‘மாஸ்டர்’, தனுஷின் ‘மாறன்’ படங்களில் நடித்தார். இவர் 5 வருடத்துக்குப் பிறகு ‘கிறிஸ்டி’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். வயதான பெண் மீது வாலிபன் ஒருவன் காதல் கொள்வது போன்ற கதையை கொண்ட படம் இது.

இதுபற்றி மாளவிகா மோகனன் கூறும்போது, ‘‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடிக்கும் காதல் படம் இது என்பதால் எனக்கு ஸ்பெஷலானது. இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தது. 3 மாதம் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த நாட்கள் இனிமையானவை” என்றார். இதில், மேத்யூ தாமஸ் நாயகனாக நடிக்கிறார். ஆல்வின் ஹென்றி இயக்குகிறார்.

முன்னதாக, ‘தி கிரேட் ஃபாதர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார் மாளவிகா. இது கடந்த 2017ம் ஆண்டு வெளியானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in