‘‘என் ஃபைனல் இயர் கிளாஸ் ரூம் இது” - மம்முட்டியின் நினைவலைப் பகிர்வு 

‘‘என் ஃபைனல் இயர் கிளாஸ் ரூம் இது” - மம்முட்டியின் நினைவலைப் பகிர்வு 
Updated on
1 min read

நடிகர் மம்முட்டி தான் படித்த கல்லூரியின் வகுப்பில் அமர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த நாஸ்டால்ஜியா வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் மம்முட்டியின், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து அவரது நடிப்பில் ‘கிறிஸ்டோஃபர்’, ‘காதல் தி கோர்’ படங்கள் வெளியாக உள்ளன.

நடிகர் மம்முட்டியைப் பொறுத்தவரை, அவர் அடிப்படையில் சட்டம் படித்தவர். கேரள மாநிலம், எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் தான் அவர் படித்தார். அத்துடன் சிலகாலம் வழக்கறிஞர் பணியும் செய்தார். அதன் பின்பே சினிமாவுக்கு நடிக்க வந்தார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் நடிகர் மம்முட்டி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் படித்த சட்டக் கல்லூரியில், தன் வகுப்பறைக்கே சென்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இது எர்ணாகுளம் லா காலேஜ். இப்போது நான் இருப்பது தான் என் ஃபைனல் இயர் கிளாஸ் ரூம். இப்போது இங்கு வகுப்புகள் இல்லை. இண்டோர் கோர்ட் பகுதி இங்கு உள்ளது. அதில் சில நிகழ்ச்சிகளும் நடத்தினோம். இந்த இடம் பழைய திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில் கொச்சி சட்டசபை ஹாலாக இருந்தது’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை மம்முட்டி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in