மோகன்லால் படத்தில் கமல், ஜீவா

மோகன்லால் படத்தில் கமல், ஜீவா
Updated on
1 min read

‘ஜல்லிக்கட்டு’ படம் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி, மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜஸ்தானில் தொடங்கியது.

இதில் மோகன்லால் மல்யுத்த வீரர் பாத்திரத்தில் நடிக்கிறார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரேடி, டேனிஷ் சேட் உட்பட பலர் நடிக்கின்றனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார்.

இதில், நடிகர் கமல்ஹாசனும் ஜீவாவும் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in