Published : 06 Dec 2016 03:18 PM
Last Updated : 06 Dec 2016 03:18 PM

தெலுங்கு திரையுலகிலும் கோலோச்சிய ஜெயலலிதா

தமிழ் திரையுலகம் போலவே தெலுங்கிலும் ஜெயலலிதா புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். 1964 முதல் 1980 வரை ஜெயலலிதா சுமார் 24 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல கதாநாயகர்களான என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா மற்றும் காந்தராவ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் ஜெயலலிதா.

ஆமே எவரு, கண்ணே பிள்ள, கூடாசரி 116, அலிபாபா 40 தொங்கலு, கோபாலுடு பூபாலுடு, சிக்கடு தொரக்காது, திக்க சங்கரையா, ஆஸ்திபாருலு, பிரேமலு பெல்லிலு, அதுருஷ்தவந்துலு, சுகடுகலு, தேவுடு சேசினா மனுஷுலு, மனுஷுலு மமதாலு, கதானாயகுனி கதா ஆகிய திரைப்படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

என்.டி.ராமராவுடன் 11 படங்களிலும், நாகேஸ்வர ராவுடன் 8 படங்களிலும், கிருஷ்ணாவுடன் 2 படங்களிலும், சோபன் பாபு, ஜக்கையா ராமகிருஷ்ணா மற்றும் ஹரநாத் ஆகிய நடிகர்களுடன் முறையே ஒரு படத்திலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருடன் நடித்த விதத்தில் தாயார், மகள் இருவருடனும் இந்தியாவில் முதல் முறையாக நடித்தவரானார் என்.டி.ராமராவ்.

என்.டி.ராமராவ் கிருஷ்ண பகவான் பாத்திரத்தில் நடிக்க ஜெயலலிதா வசுந்தரா என்ற பாத்திரத்தில் நடித்தார். தெலுங்கில் ஜெயலலிதா நடித்த முதல் படம் மற்றும் கடைசி படம் இரண்டிலும் நாகேஸ்வர ராவ் நாயகர்.

1964-ல் மனுஷுலு மமதாலுவில் நாகேஸ்வராராவுடன் தன் முதல் படத்தில் நடித்த ஜெயலலிதா, 1980-ல் தனது கடைசி தெலுங்கு படமான நாயகடு விநாயகடுவில் நாகேஸ்வரராவுடன் நடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x