

பிரபல மலையாள குணச்சித்திர நடிகை லீனா ஆண்டனி. ‘ஜோ & ஜோ’, ‘மகள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பகத் பாசில் நடிப்பில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தில் அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்குப் பாராட்டுகள் கிடைத்தன. சிறு வயதில் 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த அவர், குடும்பத்தை வழிநடத்த படிப்பைத் தொடரவில்லை. இதனால் உயர்நிலைப் பள்ளியை முடிக்காத லீனா, 57 வருடங்களுக்குப்பின், தனது 73 வது வயதில் 10-வது வகுப்பு தேர்வை எழுதினார். இப்போது அவர் அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அடுத்ததாக பிளஸ் ஒன் படிக்கும் எண்ணத்திலும் இருக்கிறார். அவருக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.