

ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை, சமீபத்தில் பெற்றது. இதற்கு பிரதமர் மோடி உட்பட பலரும் படக்குழுவைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முன்னதாக, இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், இயக்குநர் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் பங்கேற்றனர்.
அப்போது ஜூனியர் என்.டி.ஆர் அளித்த பேட்டியில், மார்வெல் நிறுவன படங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது. அதில் ‘அயன்மேன்’ எனக்குப் பிடித்த கேரக்டர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சூப்பர் ஹீரோ படங்களால் புகழ்பெற்ற மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவன நிர்வாகி, விக்டோரியா அலோன்சோவை, ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்துப் பேசியுள்ளார். மார்வெல் படங்களில் நடிப்பது பற்றிய சாத்தியங்களை இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அவர்கள் வெளியிடலாம் என்று சொல்கிறார்கள்.