தென்னிந்திய சினிமா
ஓட்டுநர் உரிமம் பெற்ற மஞ்சு வாரியர்
நடிகை மஞ்சு வாரியர், ‘துணிவு’ படத்தில் நடித்தபோது, அஜித்துடன் பைக் ரைடு சென்றார். இது பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘துணிவு’ படத்தின் புரமோஷனில் பேசியபோது, நீண்ட தூரம் பைக்கில் செல்லும் ஆசை, தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முறையாக வாகனம் ஓட்டி, உரிமம் பெற்றுள்ளார்.
