“கடவுளைச் சந்தித்தேன்”- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்த ராஜமவுலி பூரிப்பு

“கடவுளைச் சந்தித்தேன்”- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்த ராஜமவுலி பூரிப்பு
Updated on
1 min read

‘நான் கடவுளைச் சந்தித்தேன்’ என பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் உடனான சந்திப்பு குறித்து ராஜமவுலி பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. அண்மையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கோல்டன் குளோபல் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்ட ராஜமவுலி, புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் கடவுளைச் சந்தித்தேன்” என பதிவிட்டு, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அவரின் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'தி ஃபேபல்மேன்ஸ்' ('The Fabelmans) படத்திற்காக இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான இரண்டு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in