

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷின் ‘அசுரன்’ மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது, அஜித்துடன் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் கடந்த 11ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்புவதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இதில் அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறேன். இது போன்ற பாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார். பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர், வரும் 20ம் தேதி, சென்னையில் ‘ராதே ஷ்யாம்' எனும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார்.