ஆஸ்கர் விருது மேடையில் நடனம்: ராம் சரண்

ஆஸ்கர் விருது மேடையில் நடனம்: ராம் சரண்
Updated on
1 min read

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்.ஆர்.ஆர்’. கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இசை அமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட படக்குழுவுக்கு பிரதமர் உட்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அடுத்து உலகின் மிகப்பெரிய சினிமா விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது பட்டியலிலும் அந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது. இறுதிப்பட்டியலுக்குத் தேர்வுபெறுவது பற்றி வரும் 24ம் தேதி தெரியவரும்.

இந்நிலையில், ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டால், விருது மேடையில் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடனமாடுவீர்களா? என்று நேர்காணல் ஒன்றில் ராம்சரணிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “நிச்சயமாக ஆடுவோம். அவர்கள் எங்களுக்கு விருது கொடுக்கப் போகிறார்கள் என்றால், ஏன் ஆடக்கூடாது? நாங்கள் மீண்டும் 17 முறை ஆடுவோம்” என்றார்.

அந்தப் பாடல் 17 ‘டேக்’ வாங்கி படமாக்கப்பட்டதால் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in