ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் 10 இந்திய படங்கள்

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் 10 இந்திய படங்கள்
Updated on
1 min read

95 வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 12ம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த விருதுக்காக இந்தியா சார்பில், ‘செல்லோ ஷோ’ என்ற குஜராத்திப் படம் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பொதுப்பிரிவில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 301 படங்கள் பரிந்துரைப் பட்டியலுக்கு முந்தைய தகுதிப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதில், ‘ஆர்ஆர்ஆர்’, ‘காந்தாரா’, ‘இரவின் நிழல்’, ‘ராக்கெட்ரி’, ‘கங்குபாய் கதியவாடி’, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’, ‘விக்ராந்த் ரோணா’, மராத்தி படங்களான, ‘மீ வசந்த்ராவ்’, ‘துஜ்யா சாதி கஹி ஹி’ ஆகிய 9 இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆவணப்படமான ‘ஆல் தேட் பிரீத்ஸ்’, ஆவணக் குறும்படமான, ‘தி எலிபென்ட் விஷ்பர்ஸ்’ ஆகிய படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

‘காந்தாரா’ தகுதிப் பட்டியலில் இடம் பெற்றதற்கு அதைத் தயாரித்துள்ள ஹோம்பாளே நிறுவனம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in