

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘கே.ஜி.எஃப் 2’. பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார். இதன் அடுத்தடுத்தப் பாகங்கள் உருவாக இருக்கின்றன. இந்நிலையில், 5 வது பாகத்துக்குப் பிறகு யாஷ் மாற்றப்படுவார் என்று விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் “‘கே.ஜி.எஃப்’ படத்தின் 3ம் பாகம் 2025ம் ஆண்டு தொடங்கும். 5 பாகத்துக்குப் பிறகு ஜேம்ஸ்பாண்ட் பட வரிசை போல, யாஷ் மாற்றப்படுவார். மற்றொரு ஹீரோ ராக்கி பாய் கேரக்டரில் நடிக்கலாம். இப்போது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் தயாரிக்கும் முடிவில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
ஹோம்பாளே பிலிம்ஸ், இப்போது ‘சலார்’, மலையாளத்தில் ‘தூமம்’, கன்னடத்தில் ‘பகீரா’, ராஜ்குமார் பேரன் யுவ ராஜ்குமார் நடிக்கும் படம், தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது.