Published : 09 Jan 2023 09:32 AM
Last Updated : 09 Jan 2023 09:32 AM
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீமுகி. இவர் தமிழில் ‘எட்டுதிக்கும் மதயானை’ என்ற படத்தில்நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர்,சினிமாவுக்கு வருவதற்கு முன்டிவி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். ஸ்ரீமுகிக்கும் ஹைதராபாத் தொழிலதிபர்ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இதை மறுத்துள்ள ஸ்ரீமுகி “எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை. இன்னும் மூன்று,நான்கு வருடங்கள் கழித்துதான் அது பற்றி யோசிப்பேன். சிலர் வேண்டும் என்றே இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள். பலமுறை என் திருமணம் பற்றி வதந்தி பரப்பி இருக்கின்றனர். உண்மையிலேயே திருமணம் முடிவானால் அது பற்றி நானே அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT