‘ஆர்ஆர்ஆர்’ தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோக்கும் நடிகர் யஷ்?

‘ஆர்ஆர்ஆர்’ தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோக்கும் நடிகர் யஷ்?
Updated on
1 min read

கன்னட நடிகர் யஷ் தனது அடுத்த படத்திற்காக ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவீன் குமார் கௌடா எனப்படும் நடிகர் யஷ், கேஜிஎஃப் வரிசை திரைப்படங்கள் வாயிலாக பிரபலமடைந்தவர். அவருக்கு இன்று(ஜன.8) 37வது பிறந்தநாளாகும். இதனையொட்டி கன்னட சினிமாவைக் கடந்து பலதரப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பதிவாகி வருகின்றன. இந்த வரிசையில் துபாயிலிருக்கும் புர்ஜ் கலிஃபா என்ற வானளாவிய கட்டிடத்தில் யஷ்க்கான பிறந்தநாள் வாழ்த்துகள் ஒளிர்ந்தன. இதனை உற்சாகமாக பகிர்ந்து வரும் யஷ் ரசிகர்களிடையே புதிய அப்டேட் பரவி வருகிறது.

‘கேஜிஎஃப்’ படங்களுக்குப்பிறகு யஷ் நடிக்கும் ‘யஷ்19’ படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த கேவின் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in