

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, இந்தியில் ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு (கூர்க்) பகுதியின் சிறந்த நபராக ராஷ்மிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அங்குள்ள சுற்றுலா இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “தனது நடிப்பு மற்றும்நடனம் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளராஷ்மிகா, குடகு கலாச் சாரத்துக்கானஅதிகாரப்பூர்வமற்ற தூதராக உருவெடுத்திருக்கிறார்” என்ற அந்தஇணையதள ஆசிரியர் போபண்ணாதெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிகா குடகு பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.