ரஷ்யாவிலும் சாதிக்கும் புஷ்பா

ரஷ்யாவிலும் சாதிக்கும் புஷ்பா
Updated on
1 min read

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘புஷ்பா’. சுகுமார் இயக்கி இருந்தார். பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படம், வட இந்தியாவிலும் பெரும் வெற்றிபெற்றது. இதன் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படம் கடந்த டிச.8ம் தேதி ரஷியாவில் டப் செய்து வெளியிடப்பட்டது. அங்கு 774 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 25 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 10 மில்லியன் ரூபிள் (ரூ.12 கோடி) வசூலித்து சாதனைப் படைத்து வருகிறது. ரஷ்யாவில் டப் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த இந்திய படமாக, ஹிருத்திக் ரோஷன் - டைகர் ஷெராஃப் நடித்த ‘வார்’ இருக்கிறது. இந்தப் படம் ரூ.17 கோடி வசூலித்துள்ளது. அந்த வசூலை நோக்கி ‘புஷ்பா’ செல்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in