

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மலையாள படம், ‘ஜெய ஜெய ஜெய ஹே’. இதை இயக்கிய விபின் தாஸ், அடுத்து பிருத்விராஜ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இதற்கு ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தத் தலைப்புக்கு கேரள மாநில விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரதீஷ் விஸ்வநாத் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். குருவாயூரப்பன் பெயரில் படம் எடுத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.
இதற்கிடையே, இந்த மிரட்டலுக்கும் விஷ்வ இந்து பரிஷத்துக்கும் தொடர்பில்லை என்றும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்து வரும் நபர், பல ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் அந்த அமைப்பின் தலைவர் வி.ஜி.தம்பி தெரிவித்துள்ளார்.