Published : 03 Jan 2023 02:44 PM
Last Updated : 03 Jan 2023 02:44 PM

மோகன்லால் ஜோடியாக மராத்தி நடிகை

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ‘ஆமென்', ‘அங்கமாலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உட்பட சில படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். படத்துக்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’என தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இதனால் ஒவ்வொரு மொழியில் இருந்தும் நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைக்கின்றனர். கன்னட காமெடி நடிகர் டேனிஷ் சேட் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், நாயகியாக மராத்தி நடிகை சோனாலி குல்கர்னி ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சோனாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x