நடிகை பவித்ராவை மணக்கிறார் நரேஷ்

பவித்ரா லோகேஷ்
பவித்ரா லோகேஷ்
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு நரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் “புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தமிழில், 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவும் காதலித்து வருகின்றனர்.

நரேஷ், தமிழில் 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ், மூன்று முறை திருமணம் செய்தவர். இருவரை விவாகரத்து செய்த அவர், மூன்றாவது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளதாகக் கூறப்பட்டது. பவித்ராவும் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் “புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in