

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படம், ‘காந்தாரா’. அங்கு மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்தப் படத்தில் அம்மாநிலத்தின், பாரம்பரியமான ‘பூத கோலா’ விழா இடம்பெற்றது. கர்நாடகாவில் பின்பற்றப்படும் இந்த பழமையான நிகழ்வு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா, தனது சொந்த ஊரான மங்களூரில் நடந்த இந்த ‘பூத கோலா' விழாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நேரில் பார்த்து ரசித்தார். அதை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துக்கொண்டார். அவர் நிகழ்ச்சியை ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.