இது ரீரிலீஸ் காலம் - 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ‘குஷி’ தெலுங்கு வெர்ஷன்

இது ரீரிலீஸ் காலம் - 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ‘குஷி’ தெலுங்கு வெர்ஷன்
Updated on
1 min read

21 ஆண்டுகளுக்குப் பிறகு, எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ரஜினி நடித்த ‘பாபா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாள் 1.4 லட்சம் வசூலித்தது. அதைத் தொடர்ந்து ‘காதல் தேசம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கும் மறுவெளியீடு செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

கடந்த 2000-ல் நடிகர் விஜய், ஜோதிகா, விஜய்குமார், ஷில்பா செட்டி, மும்தாஜ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வெற்றிப் படம் ‘குஷி’. இந்தப் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் படம் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2001-ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளிய இப்படத்தையும் எஸ்.ஜே.சூர்யாதான் இயக்கினார்.

இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி தெலுங்கு ‘குஷி’ திரையங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in