ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன்
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு, இந்திபடங்களில் நடித்து வருகிறார், ரகுல் ப்ரீத் சிங்.தெலுங்கு திரையுலகினருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் வருடம் கலால் துறை அதிகாரிகள், நடிகைகள் சார்மி, ரகுல் ப்ரீத் சிங், முமைத்கான், இயக்குநர் பூரி ஜெகநாத், ரவிதேஜா, ராணா உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் பண மோசடியும் நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், தெலங்கானா அமலாக்கப்பிரிவினர் அதுபற்றிவிசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் வரும்19ம் தேதி ஆஜராகுமாறு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் ரகுல்விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in