

ரஜினியின் ‘முத்து’ படத்தின் சாதனையை ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் முறியடித்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்,ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
இது, கடந்த மாதம் ஜப்பானில் வெளியானது. அங்குரஜினியின் ‘முத்து’ படம்தான் அதிகம் வசூலித்த (ரூ.23.50 கோடி) இந்திய படமாக சாதனைப் படைத்துள்ளது. இப்போது ‘ஆர்ஆர்ஆர்’ படம், ரூ.24 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ‘முத்து’ சாதனையை முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.