‘கேஜிஎஃப்’ புகழ் கிருண்ஷா ஜி ராவ் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி

‘கேஜிஎஃப்’ புகழ் கிருண்ஷா ஜி ராவ் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி
Updated on
1 min read

கன்னடத்தில் உருவான ‘கேஜிஎஃப்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் வயது மூப்பு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 70. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ முதல் பாகத்தில் நடிகர் கிருஷ்ணாஜி ராவ் கண்பார்வை தெரியாதவராக நடித்திருப்பார். இரண்டாம் பாகத்தில், "உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்" நாயகனுக்கு அவர் ஹைப் கொடுக்கும் காட்சி பெரும் புகழ் பெற்றது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் பாதிப்பு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் இருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். கன்னடத்தில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பல ஆண்டுகளாக துணை நடிகராக வலம் வருகிறார். மேலும், கிருஷ்ணா ஜி ராவ் உதவி இயக்குநராகவும் பல படங்களில் பணியாற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இறப்புக்கு கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம், “கேஜிஎஃப் ரசிகர்களால் டாடா என்று அழைக்கப்படும் கிருஷ்ணா ஜி ராவின் மறைவுக்கு ஹோம்பலே படக்குழுவினரின் இரங்கல்கள். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளது.

நடிகை ரவீணா டன்டான் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in