கமல் பாணியில் இளம் நடிகருக்கு ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்த மம்முட்டி

கமல் பாணியில் இளம் நடிகருக்கு ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்த மம்முட்டி
Updated on
1 min read

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த படம் ‘ரோர்சாக்’ (Rorschach). சாதாரணக் கதை என்றாலும், நான் லீனியர் முறையில் சைக்காலஜிக்கல் த்ரில்லராக திரைக்கதையாக வெளியாகி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்தப் படத்தில் ‘கெட்டியோலானு எந்தன் மாலாக்கா’ படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆசீஃப் அலி, கிரேஸ் ஆண்டனி எனப் பலர் முக்கிய வேடத்தில் நடித்த இப்படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது.

இதில் கலந்துகொண்ட நடிகர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மலையாள சினிமாவின் இளம் நடிகர்களுள் ஒருவரான ஆசீஃப் அலி மேடையேறிய போது மம்முட்டியும் மேடையேறினார். ஆசீஃப் அலியின் நடிப்பை பாராட்டி பேசிய மம்முட்டி, "இந்தப் படத்தின் புரோமோஷன் சமயத்தில் துபாய் சென்றிருந்தபோது 'விக்ரம்' பட வெற்றிக்காக சூர்யாவுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்தார் என்ற செய்தி வந்தது. விக்ரம் படம் 500 கோடி ரூபாய் வசூலித்தது. இதை பார்த்த ஆசீஃப் அலி என்னிடம் ரோலக்ஸ் கடிகாரம் வாங்கி தர வேண்டும் என கேட்டார்" என்று சிரித்துக்கொண்டே கூறியவர், சர்ப்ரைஸாக ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்து அசத்தினார். இந்தக் காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in