

பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா. தமிழில், ‘கனகவேல் காக்க’, ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’, ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் கன்னட நடிகரும் பாடகருமான வசிஷ்ட சிம்ஹாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். தெலுங்கு படங்களிலும் வசிஷ்ட நடித்து வருகிறார். இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இவர்கள் நிச்சயதார்த்தம் பெங்களூருவில் நடந்தது. திருமணம் அடுத்த வருடம் நடக்க இருக்கிறது.