கேரள மாநிலத்தில் நடனப் பள்ளி தொடங்கிய நவ்யா நாயர்

கேரள மாநிலத்தில் நடனப் பள்ளி தொடங்கிய நவ்யா நாயர்
Updated on
1 min read

தமிழில் ‘அழகிய தீயே’ படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘மாயக்கண்ணாடி’, ‘ராமன்தேடிய சீதை’ உட்பட பல படங்களில் நடித்தார். இவர் கடந்த 2010–ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நவ்யா இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதற்கிடையில், நடனக் கலைஞருமான நவ்யா நாயர், கேரள மாநிலம் கொச்சியில் மாதங்கி என்ற பெயரில் நடனப் பள்ளியை நேற்று தொடங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in