

தமிழில், எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘நெஞ்சிருக்கும் வரை’, கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’, விஷாலின் ‘வெடி’, ஷாமின் ‘ஆறு மெழுகுவர்த்திகள்’ உட்பட பல படங்களில் நடித்தவர் பூனம் கவுர்.
தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia ) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது, சோர்வு, தூக்கம், ஞாபக மறதி, மனநிலை மாற்றம், தசை வலி ஆகிய பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு வரும் அவர், இதற்காக கேரளாவில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.
நடிகை சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடிகை பூனம் கவுரும் சிகிச்சை பெற்று வருவது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.